24 February, 2010

என் கண்ணில் நீர் வடிந்தால்...

நான் அழுதால் தான்
நீ சிரிப்பாய் எனில்
காத்திருக்கிறேன் - நாள் முழுவதும்
அழுது கொண்டே இருக்க...

எப்பொழுது புரிந்து கொள்வாயடி?

அப்பொழுது கேட்டது போல,
இப்பொழுதும் கேட்கிறேன்…
எப்பொழுது என்னை புரிந்து கொள்வாயடி?

தாய்மொழி கூட தகராறு செய்யுதடி!

தங்கமே!
உன் நினைவுகள்
மனதினில் புகுந்ததும்
தாய்மொழி கூட
தகராறு செய்யுதடி...

கனவுக்குழந்தை...!

என் கனவுக்கு உயிர் கொடுத்த
காதலே...

உறக்கம் என்பதே
இறந்தகாலம் என்றாகிவிட்டது
எனக்கு...

என் கனவுக்குழந்தையிடம்
கண் சிமிட்டி விளையாடி...
கதை பேசி தூங்கவைக்க...

கூட்டிவருவாயா என் காதலியை...!

->காயத்ரி

21 February, 2010

தலைப்பை தாங்களே தாருங்களேன்

மேல் இமைகளில்
நீ
இருக்கிறாய்
கீழ் இமைகளில்
நான்
இருக்கிறேன்
இந்த கண்கள்
தூங்கிவிட்டால்
என்ன!

-> அறிவுமதி

ஹைக்கூ

கவிதையில்
கஞ்சத்தனம் ..!!!

19 February, 2010

செம்மொழி‍ - காரணப் பெயர்

செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!

-> அறிவும‌தி

18 February, 2010

ஒரு வீரனின் மனைவி மனம்

'உன் பிள்ளையை ஈன்ற சுகம்,
உன்னை போர்முடிந்து ,
நலமாக பார்த்ததும்'.....

அழகு

உன் அழகுக்கு அழகுகூட்ட
முகப்பூச்சு ஏதும் வேண்டாம்
உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்…

காதலித்துப் பார்

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!

-> வைரமுத்து

காதலி...

பதில் சொல்ல நான் நினைக்க
பக்கத்தில் நீ இல்லை
பக்குவமாய் நான் இருக்க
பறந்து போனதென்ன
என் பைங்கிளியே
உன் நினைவில் நானுருகி
என் இரவு நீளுதடி
பறந்து வா பைங்கியே
பாவலனை தேடி.........

நட்பு

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.
-> குறள்

Who make you weep and chide wrong trends And lead you right are worthy friends.

மெய்க்காதல்...

ஓர் நொடி பார்வையில்

ஓர் ஜென்மம் கடந்து விட்டேன் .......

நீயும் நானும்

தாத்தா பாட்டியாக !!!!!

நிறம்...

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான்
கருப்பு மனிதனுக்கு குருதி சிவப்புதான்
நிறங்களில் இல்லை வாழ்கை
மனித மனங்களில் உள்ளதே வாழ்க்கை...

மரம்....

துப்பிய விஷம் அருந்துகிறாயே
நீ சிவபெருமானோ
ஓ.... மரம்!

இன்றைய அரசியல்...

நல்லவர்களையும்
நாசமாக்கிவிடும்
நாலந்தா பல்கழைக்கழக
அரசியல்...

விதி

ஆற்றில் ஒருகால்
சேற்றில் ஒருகால்
அயல்நாட்டுத் தமிழர்...

சுகம்

வளை காப்பு!
படைப்பைப் படித்த
நண்பனின் பாராட்டு!

படைப்பை
அனுப்பிவிட்டுக்
காத்திருந்தான்!
பேறுக்கால சுகம்!

என்ன கொடுமை சார்....

அதிக விலை கொடுத்தாலும்
உரிமை விற்றவர்க்கே சொந்தம்!
கல்யாண மாப்பிள்ளை!

அவலம்..

தலைவனுக்காகக் காத்திருந்தான்
மாலை மரியாதையுடன்...
கட்சிக்காகத் தீக்குளித்து
சடலமாய் படுத்தபின்னும்...

ஹைக்கூ

ஆரம்பப் பாடம்
உடற்பயிற்சி மையம்.
உயர்ந்த கட்டணத்தில்
சொல்லிக் கொடுக்கிறார்கள்
எவ்வளவு ஓடினாலும்
புறப்பட்ட இடத்திலேயே
இருப்பதற்கு..

ஹைக்கூ

காற்றில் பறித்த கொசுவை
யோசனைக்குப்பின் விடுவித்தேன்.
குறைந்திருக்கும் ஒரு கசையடி...

விகடம் சொல்லிச்சிரி ...

"அம்மா... அப்பா..."

"புள்ள வந்தானா?"

"ஆமா..."

"புது வண்டியப் பாத்தானா?"

"ஆமா, ஆமா..."

"என்ன சொன்னான்?..."

எதுவும் சொல்லாமல்
ஏறிட்டுச் சிரித்தாள்...

"சொல்லித் தொலையுங்கலேன்"

"இன்னும் நல்லதாக்
கிடைக்கலையான்னு சொன்னான்"

உரக்கச் சிரித்துவிட்டு
ஓய்ந்தவர் சொன்னார்,
"உன்னை
முதலில் பாத்தப்ப
என்ன சொன்னேனோ
அதையேதான் அவனும்
அப்படியே சொல்லியிருக்கான்..."

அங்கே,
கோபத்தைக் காண்பிக்க
முயற்சித்துத் தோற்றவளாய்,
குலுங்கிச் சிரித்தாள் அம்மா...

ஹைக்கூ

எரிந்தது வீடு

அடுப்பு எரியாததால்...

-> கார்த்திகேயன்.கா.ச

சோகத்தை ராகமாக்கு

ஒரு பறவை உன் தலையில் எச்சமிடுவதை
உன்னல் தடுக்க முடியாது;

ஆனால் அது உன் தலையில் கூடுகட்டாமல்
தடுக்க முடியும்..

சோகத்தை ராகமாக்கு
உலகம் வசப்படும் ..

அண்ணன்
வைரமுத்து...

17 February, 2010

அம்மா

அன்பு என்ற தலைப்பில்

மிக சிறிய கவிதை கேட்டார்கள்......

அம்மா

என்றேன் உடனே......

கேட்டது அம்மாவாக இருந்தால்

இன்னும் சின்னதாய் சொல்வேன்

நீ என்று........


ஹைகூ

ஆங்கிலப்பள்ளியில்
அடி வாங்கிய குழந்தை
அழுதது
"அம்மா" என்று....